Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தங்கத்தால் மீண்டு வரும் பொருளாதாரம்

தங்கத்தால் மீண்டு வரும் பொருளாதாரம்

பண அச்சடிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஜிம்பாப்வேயில் விலைவாசி விண்ணைத் தொட்டது.

பகிரவும் WhatsApp Facebook

ஒரு காலத்தில் பணம் மூட்டை மூட்டையாக இருந்தாலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் தவித்த ஜிம்பாப்வே, தற்போது தங்க ஏற்றுமதி மற்றும் புதிய நாணயத்தின் துணையுடன் பொருளாதார மீட்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.

2000-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, கட்டுக்கடங்காத பண அச்சடிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஜிம்பாப்வேயில் விலைவாசி விண்ணைத் தொட்டது. 2008 செப்டம்பரில் ஆண்டு பணவீக்கம் சுமார் 50,000 கோடி சதவீதத்தை எட்டியதாக சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது.

 
2009-ல் ஜிம்பாப்வே தனது நாணயத்தைக் கைவிட்டு, பல்வேறு வெளிநாட்டு நாணயங்களை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. இதனால் பணவீக்கம் கட்டுக்குள் வந்தது.
பின்னர் உள்ளூர் நாணயம் மீண்டும் அறிமுகமானாலும் அதன் மதிப்பு சரிந்து, பணவீக்கம் தலைதூக்கியது. இதையடுத்து, தங்கம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பை ஆதாரமாகக் கொண்டு, 2024 ஏப்ரலில் ‘ஜிம்பாப்வே கோல்டு’ அல்லது ஜிக் (ZiG) என்ற புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததும், சுரங்க உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்ததும் நாட்டுக்குக் கைகொடுத்தன. அந்நியச் செலாவணி வரத்து அதிகரித்து, நாணய மாற்று விகிதம் நிலையாக இருக்கவும் உதவியது. வேளாண்மை மீட்சியும் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நின்றது.
ஜிக் நாணயத்தில் கணக்கிடப்படும் ஆண்டு பணவீக்கம், 2025 செப்டம்பரில் 82.7 சதவீதமாக இருந்து அக்டோபரில் 32.7 சதவீதமாகக் குறைந்தது. 2026 செப்டம்பரில் இது 3.7 சதவீதமாக இருந்ததாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

 
எனினும், அமெரிக்க டாலர் பயன்பாடு இன்னும் அதிகமாக உள்ளது. உள்ளூர் நாணயத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதும், தங்க விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளிப்பதும் ஜிம்பாப்வே முன் உள்ள சவால்களாகத் தொடர்கின்றன.

முந்தைய செய்தி
Franchise model to drive quick-commerce growth in smaller cities
அடுத்த செய்தி
ஏஐ சிப் வாங்க ரூ.3.80 லட்சம் கோடி கடன் திரட்டும் எலான் மஸ்க்

தொடர்புடைய செய்திகள்